என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
மார்பில் வெடிப்பு மறைய… கானாவாழை
ஆயுர்வேத மருத்துவம் :: மூலிகைகள்,மருத்துவ மூலிகைகள் ,ஆயர்வேத மூலிகைகள்-HERBALS :: ஆயுர்வேத மூலிகைகளின் படங்கள் & பயன்கள்
Page 1 of 1
மார்பில் வெடிப்பு மறைய… கானாவாழை
[You must be registered and logged in to see this image.]
மார்பில் வெடிப்பு
மறைய…
கானாவாழை
இது மாம்பழ சீசன்.
அதிகமான அளவில் மாம்பழங்களை பார்த்தவுடன் கணக்கு தெரியாமல் சாப்பிட்டுவிட்டு
வயிற்றுவலி, கழிச்சல்,
வாந்தி என
கஷ்டப்படுவதுண்டு. மாம் பழம் உண்ணும்பொழுதுபால் அதிகம் சாப்பிடவேண்டும் என்பது
சித்த மருத்துவ விதி. புளிப்புள்ள மாம்பழங்களை உண்ணும்பொழுது சிறுநீரக கற்கள்
தோன்றலாம். பெரும்பாலும் இனிப்பான, நார்
அதிகமில்லாத மாம்பழங்களை உண்பது நல்லது. இல்லையெனில் வயிறு ஊதல், பசி மந்தம், கழிச்சல் ஆகியன உண்டாகும். ரத்தமூலம்
உடையவர்கள் அதிகம் மாம்பழம் உண்பதை தவிக்க வேண்டும்.
தாய்மைக்கு
அங்கீகாரமாக வடிவமைக்கப்பட்ட பெண்களின் மார்பகங்கள் ஹார்மோன்களை கட்டுப்படுத்தும்
மறைமுக பணியை செய்கின்றன. மாதவிலக்கின்போது ஏற்படும் உடல் மாற்றங்களில் மார்பே
பெரும்பங்கு வகிக்கிறது. பஞ்சு போன்ற நீட்சித்தன்மையுடைய சிறப்பு திசுக்களால்
ஆக்கப்பட்ட பெண் மார்பகங்களின் உட்புறத்தில் தாய்ப்பாலை சுரக்கும் லேக்டேடிக்
கோளங்கள் குவிந்துள்ளன. இவை மார்பு நுனியில் தாய்ப்பாலை வெளிப்படுத்துகின்றன.
இலக்கியங்களிலும்,
பண்டைய மருத்துவ
நூல்களிலும் பலவாறு பெருமைப்படுத்தப்பட்டுள்ள பெண்களின் மார்பகங்கள் அழகுக்கு
மட்டுமின்றி தாய்மையின் உணர்வையும், தாய்ப்பாசத்தை ஊட்டவும் பயன்படுகின்றன. ஒரு சிசுவானது பிறந்து
வளர்ந்து சுயமாக உணவு உண்ணும் காலம் வரை தனது ரத்தத்தையும் சத்தையும், அன்பையும் ஊட்டி வளர்க்க தாய்க்கு
உதவுவது மார்பகங்களே. இவ்வளவு சிறப்பு வாய்ந்த மார்பகங்களில் பலவிதமான நோய்கள்
உண்டாகலாம். மாதவிலக்கின் நிறைவு காலங்களான மெனோபாஸ் காலங்களிலும் தாய்ப்பால்
ஊட்டும் காலங்களிலும் மார்பு நுனியில் சில தொல்லைகள் தோன் றலாம். மார்பு நுனியில்
தோன்றும் தோல் வறட்சி, கிருமித்தொற்று,
கொழுப்பு அடைப்பு,
வியர்வை கோள வீக்கம்
போன்ற காரணங்களால் மார்பில் வெடிப்பு உண்டாகலாம். இந்த வெடிப்பு உண்டான மார்பில்
சில நேரங்களில் திரவ கசிவும் தோன்றிவிடும்.
பெண்களின் மார்பு
காம்புகளில் தோன்றும் வெடிப்பை முலைக்காம்பு விரணம் என சித்த மருத்துவம்
குறிப்பிடுகிறது. உணர்ச்சி நரம்புகள் ஏராளமாக நிறைந்துள்ள மார்பு நுனியில்
விரணங்கள் ஏற்படும்பொழுது முறையான சிகிச்சை பெறாவிட்டால் திரவ கசிவில்
துர்நாற்றமும், அக்குள்
பகுதிகளில் வீக்கம் மற்றும் நெறிகட்டுதலும் உண்டாகும். ஆகவே முலைக்காம்புகளில்
வெடிப்பு, கசிவு
ஆகியவை ஏற்பட்டால் உடனே கவனித்து விரணத்தை ஆறச்செய்ய வேண் டும். மார்பை சுகாதாரமாக
வைக்காததாலும், மார்பு
நுனித்தோலின் வறட்சியினாலும், உள்ளாடையில்
ஏற்படும் கிருமித் தொற்றினாலும், ஈரமான
உள்ளாடைகளை அணிவதாலும் மார்பு நுனியில் வெடிப்பு உண்டாகிறது. அதுமட்டுமின்றி
கரப்பான், சோரியாசிஸ்,
பூஞ்சைத் தொற்று,
சர்க்கரை நோய்
போன்றவற்றிலும் மார்பில் வெடிப்பு அதிகமாகிறது.
பெண்களின் மார்பு
காம்பிலுள்ள துளையில் ஏராளமான பால் சுரப்பிகளும், பலவகையான திரவ சுரப்பிகளும்
முடிவடைகின்றன. இவை வியர்வை, தாய்ப்பால்
மற்றும் கொழுப்பு கோளங்களுடன் இணைந்து கிருமித்தொற்றினால் பாதிக்கப்படும்பொழுது
மார்பு கசிவை ஏற்படுத்துகின்றன. மார்பு நுனியில் ஏற்படும் விரணங்களை ஆற்றி தோல்
வறட்சியை கட்டுப்படுத்தும் அற்புத மூலிகை கானாவாழை.
கானாவாழை இலைகளை
காம்பு நீக்கி மைய அரைத்து, மார்பு
நுனியில் தடவி அதிகாலையில் திரிபலாச்சூரணம் கரைத்த நீரால் கழுவிவர விரணம் ஆறும்.
இதே கானாவாழை இலைகளை லேசாக நீர் தெளித்து, இடித்து, சாறெடுத்து
சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து மார்பில் தடவிவர விரைவில் ஆறும். கானாவாழை இலை,
வேப்பிலை, மஞ்சள்தூள் மூன்றையும் நன்கு அரைத்து
மார்பில் தடவிவந்தால் வெடிப்பு நீங்கி, கொப்புளம், கசிவு
மாறும்.

தோழன்- உதய நிலா
- Posts : 421
Points : 899
Reputation : 4
Join date : 27/10/2010
ஆயுர்வேத மருத்துவம் :: மூலிகைகள்,மருத்துவ மூலிகைகள் ,ஆயர்வேத மூலிகைகள்-HERBALS :: ஆயுர்வேத மூலிகைகளின் படங்கள் & பயன்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|